நிலவு-மலர்-அவள்.(கொ.ப.பி.அய்யா)

நிலவே மலரே நீங்களும் அவளோ!
பழகிட விழையும் ஏங்கலின் பரலோ!
வடிவில் அவளாய் தாங்களும் வனப்போ!
முடிவில் அவளிடம் வீங்கவும் நினப்போ!

நிலவே நீ என்ன நித்திய ஒளியோ!
பழுதிலா முகமோ! பார்க்கவும் எழிலோ!
மெலிவதும் மேவதும் தினமொரு மேனி
பொலிவோ அவளிடம் போட்டிக்கு நிகரோ!

விண் மீன் ஏன்தான் வீணே மயக்கமோ!
தன்னிலை தொலைத்துத் திரிவதும் ஏனோ!
என்னிலா போன்றே தண்ணிலா ஆமோ!
என்னாளும் முழுமை எவளறியாயோ!

மலரே நீதான் மணம் தருவாயோ!
அலரின் ஊற்றும் ஆவதும் நீயோ!
அழகின் படைப்பின் ஆணவம் தானோ!
அனைத்தும் அவளே!தலை குனிந்தாயோ!

அலைந்திடும் வண்டே அசலுந் தேடுதியோ!
மலைந்திடும் நீயும் நிசமுங் கேளுதியோ!
மென்மை தண்மை காய்வும் ஒருங்குமோ!
தன்மை அவளென நீ அறிவாயோ!

இன்னமும் ஒன்றே எண்ணங் கொள்வீரோ!
என்னவள் போலியாய் இனி அலைவீரோ!
திண்ணமாய் சொல்வேன் அவள் ஆவீரோ!
எண்ணமுங் கொண்டு வீண் போவீரோ!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (15-Sep-13, 10:34 am)
பார்வை : 340

மேலே