முஸாபர் நகர் .....
கத்திகள் காயமுற்று
கிடந்தன
குற்றுயிரும் கொலையுயிருமாய்
மனிதம் ...
..........................................................................
கண்ணனின் கீதைகள்
கவுரவர்களின் கரத்தில் ..
போனதால்
மானபங்க பட்டு
கிடந்தது
பெண்மை போற்றும்
தேச தர்மங்கள் ...
......................................................................................
எட்டுமாத குழந்தையை
எரித்து கொன்றார்களாம்
இறக்கவில்லை போலும்
இதயத்தில் ‘கம்ஷன்’கள்
.........................................................................................
இராவணனை
துளைத்த அம்புகள்
போதிக்க தவறியதோ
வன்புணர்வில் கதறிய
பெண்ணின் கண்ணீர்வலிகளை
...................................................................................
என்ன கற்றுகொண்டோம்
கங்கையை ,யமுனையை
,பசுவை மட்டும்
தாயாக பார்பதற்கா ...
...................................................................................
விலங்கிடப்பட்ட
வேதநூல்கள்
வெறியர்களின்
சிறைகூடரங்களில் ...
“விடுதலை” தேடுகின்றன
...................................................................................
வாக்குகளத்தின்
கறுப்புமைகளில் ..
காய்ந்து கிடக்கும்
கொல்லப்பட்டவர்களின்
குருதியின் கறைகள்.
..........................................................................
இத்தனைக்கும் இடையில்
உணரமுடிகிறது
இவ்வெறியர்கள்
இந்துக்கள் அல்ல
இந்துக்களே..... அல்ல .....