வரதட்சிணை (ஹைக்கூ)
களங்கப்பட்ட கன்னிப் பெண்.
வெட்டப்பட்ட ரகசிய புதைகுழி
புதைக்கப்பட்ட அவமானம் வரதட்சிணை!
காதல் தோல்வியில் அவள்.
வியாபார நஷ்டத்தில் அவன்.
மறுமலர்ச்சி ஏற்படுத்தியது வரதட்சிணை!
சிறுகச் சிறுகச் சேர்த்தப் பொருள்.
கொள்ளை போனது ஒரே நாளில்.
அந்தரங்கமாய் வரதட்சிணை.!
முகமூடி அணியாத திருடன்.
பகிரங்கமாய் அடித்தான் கொள்ளை.
வரதட்சிணை!