அறிந்ததும் அறியாததும் வாழ்வில்

வளர்பிறையும் தேய்பிறையும்
வானுக்குத் தெரியாது !
இன்பமும் துன்பமும் நிகழ்வது
வாழ்வில் நிலைக்காது !
நல்லதும் கெட்டதும்
மழலைக்கு தெரியாது !
நல்லவர் கெட்டவர்
மனதும் அறியாது !
இயற்கையும் செயற்கையும்
இணைவது தெரியாது !
நண்பர் பகைவர் யாரென்று
இதயங்கள் அறியாது !
ஆசையின் அன்பின் ஆழத்தை
அளவிட முடியாது !
பாசத்தின் பண்பின் பரப்பினை
கணக்கிட இயலாது !
அறியாததும் புரியாததும் உலகில்
எவையென எண்ணிட முடியாது !
ஏழைகளின் துயரை என்றும்
துடைத்திட முடியாது !
நட்பையும் காதலையும் பூமியில்
ஒன்றேஎன இதயம் ஏற்காது !
எழுத்தையும் தளத்தையும் இனி
நம்மிடம் பிரிக்க முடியாது !
பழனி குமார்