-என்ட ஈழம்..

-எந்தவொரு
புரட்சி கவிதையும்,
பாடலும் என் தாய்த்தளம்
சென்று களமாடது..
நினைவில் கொள்
தமிழா,,
உணர்வளிக்கும்..
உடல் நீ கொடு..,


-அன்னார்ந்தால்
புகைமூட்டம்..
திரும்பினால் கொத்துகுண்டுகள்..
இதில் எவ்விடம் தேடுவேன்
கிழிந்த
என்ட குழந்தை சடலத்தை..

என்ட மகனை நோக்கினேன்;
என்ட மனைவியை நோக்கினேன்;
அவ்விரு பிணத்தின்
இடையில் தான்
என்ட சுயமரியாதையை
உயிர்ப்பித்தேன்..

ஒரு ஈழத்தந்தையின்
அழுகையை அலசிய போது
கிடைத்த கனல்காற்று
அது..
சொல்லி மாலாதடா..

-"பதுங்குக்குழிகள்
நிரம்பியாயிற்று,
இனி பதுங்க எதிரியின்
வெடிகிடங்குதான்" என்று
எம் பள்ளித்தமிழன்
புலம்பியது கேட்டதா.?


-முதுகில்
சுட்டுவிட்டாய்..

கண்கள் கட்டி
முதுகில்
சுட்டுவிட்டாய்..

நல்லவேளை
நீ பிழைத்தாய்..
நேரில் சுட்டிருந்தால்
கனல் கக்கும்
எம் தமிழ் கண்களே
உன்னையும் உன்
தோட்டவையும்
தடம் தெரியாமல்
தின்றிருக்கும்..

-போர்முனை கடைசியில்
எம் தமிழ் போராளியின்
ஐந்துவரி அறைகூவல்
அறிவாயா நீ.?
"குண்டுகளுக்கு
மார் காட்ட மகிழ்ச்சியே,
மரித்து போனால்
யாரடா போராடுவது..?
எம் கழுத்தில்
குப்பிக்குப்பதில்
தோட்டவைத் தொங்க விட்டிருந்தால்
பற்றாக்குறையின்போது
அதையும் பற்ற
வைத்து பாய்ச்சியிருப்பேன் .."

-எதற்கடா அந்த
இரண்டெழுத்து மாநாடு..?
நல்லிணக்க பெயரில்
மேசையில் தேநீர் அருந்தி
சிரித்து
கும்மாளமிடவா.?
மறுபடியும் சினிமா பிரவேசமா.?

-"கடலில் எறிந்தால்
கட்டுமரமாகதான் மிதப்பாய்.,
நம்பினோம்..
மிதந்துகொண்டே சென்று
எம் இன எதிரி பாசறையில்
படுத்து விட்டாயே..."


இதற்கு அந்த இத்தாலி
கட்டுமரம் மேல்..


இப்போதுதான்
காரம் நாக்கை
சுடுகிறது...

நீ தமிழனா.?

-ஈழம்
என்ன மாற்றான் நிலமா?
கண்டவனெல்லாம்
கதிரறுக்கிறான்..?
செக்கை சுற்றுவதால்
வயல் விளையுமென
மானம் தொலைத்த
மாடுகள் நினைக்குதோ..?

தெளிவுகோள்..

-ஆதரவை முன் அனுப்பி
ஆயுதத்தை
பக்கவாட்டில்
கொடுத்தவனிடமே
தீர்வு கேட்பதா.?

மறக்காதே
தமிழா...
அவன் ஒரு இனத்தையே
அழித்தவன்..

-அன்றே என்ட
தமிழ் தாய் குவேனி,
விஜயனை விரட்டியிருந்தால்
இன்று
இத்துனை வெடிமருந்துகளை
மடியில்
சுமந்திருப்பாளா
என்ட தமிழ்த்தோழி..?

-அரசியல் வேறு;
புரட்சி வேறு;
இப்போது
புரிந்துகொண்டாயா
தமிழா..

அவர்கள்
தன்நலத்துக்கு
தாயையும் விளம்பரப்படுத்தும்
ஆதயவாதிகள்..

-சொகுசுக்கு
ஈழம் தோண்டும்
உயிர்
கொள்ளையர்கள்..


-அடேய்
பிழைப்பு கவிஞனே..
துரோகி ஒதுக்கி
பட்டியல் போட்டு
பாடிய போதே
துரோகிப்பட்டியலில்
நீயாய் சென்று
இணைந்து விட்டாய்..

எச்சரிக்கை..

உன் பாடை பயணதிற்குள்
பரிகாரம் தேடிக்கொள்...

இல்லையெனில்
உன் பரிகாரமே பாடையாய்

இருக்கும்..


-என்ட ஈழம் சினிமா அல்ல
கூத்தாடிகளே.,
மேடை மீது அழுது, கொந்தளித்து
கீழ் இறங்கி சிரிக்க..

-வெற்று மைதானத்தில்
மட்டும் சீறும்
சிறுத்தையென
நீ இருக்காதே தமிழா..

கண்டுகொள்;
பன்னி எதிரில் வந்தாலும்
பயந்து கை குலுக்குவோர்களும்
இங்கு உண்டு..
வக்கற்றவனுக்கு
வாயில் வாள் எதற்கு..?
வாள் எறிந்து
அரிதாரம் பூசி நீயும்
அந்த கலைக்கொட்டகையில்
கலந்து விடு..
அப்போதாவது எம் நடிப்பில்லா புரட்சி
வெடிக்கட்டும்..

இறுதியாய்..
என் இன எதிரியே...
மறக்காதே..

"நீ
தின்று விழுங்குவது
தமிழனல்ல..
தனல் தண்டுகளை..
உன் குடல் கருக்கி,
உடல் கிழிப்பது உறுதி.."

"ஈழம் வெல்லும்......."

"இந்தியா வெறுத்து இனம் காப்போம்"


க.ஈழன் ஷர்மா.


(நம் ஈழத்திற்கான மாணவர் போராட்டம் நடைபெற்ற போது அதில் கலந்துகொள்ள முடியாத இயலாமையில் நின்றுகொண்டு நான் பதித்த உணர்சிகள் இது.)

எழுதியவர் : க.ஷர்மா. (16-Sep-13, 12:30 pm)
பார்வை : 346

மேலே