[506] கருத்துனுள் பூத்த கவிதைகள்...(16)
புலமியின் கவிதை- 141212-ற்கு கருத்தாகப் பூத்தது..
பூரணப் பௌர்ணமியாள்
இடைமெலிந்தாள்-அவள்
காரணம் இன்றியோ
பசலையுற்றாள்?
வாரணம் இன்றியே
துயருருவாள்- என்று
வாரணம் ஊதுமென
அயருருவாள்!
தோரணம் எழுந்திடவே
துயர்களைவாள் -கண்ணில்
நீரணை நீக்கியே
மகிழ்வுறுவாள்!
ஆரணம் ஓதிட
ஆர்வருவார்? - அவள்
பூரணம் அடையவே
பூதருவார்!
====வாரணம்=காத்தல்; சங்கு; ஆரணம்=வேதம்;========