அர்த்தம்
ஆயிரம் பேர் பல ஆயிரம் முறை சொல்லி இருப்பார்கள்
உன்னோடு இருந்த பல மணி நேரம் கூட
சில மணி துளிகளாய் கரைந்தது
நீயின்றி நான் இருக்கும் சில மணி துளிகள் கூட
பல யுகங்களாய் கனத்தது என்று !
என்னை விட்டு நீ சென்ற சில
மணி துளிகளில் இதன் அர்த்தம் புரிந்தது எனக்கு !!