விடியல்.
ஓவ்வொரு முறையும்.. நீ
சரியாக தேர்ந்தேடுபவர்கள்
தவறாக தான் போகிறார்கள்
ஆனாலும் நீ கஜினி முகமதுவாக
முயற்சிக்கிறாய்...
எப்பொழுது விடியும் என ஏழையின்
எதிர்பார்ப்பும்..
ஆட்சி எப்பொழுது முடியுமோ
என மக்கள் பிரதிநிதிகளின் பயமும்
உணர்கிறாய் ஓவ்வொரு ஊழலின் முடிவிலும்..
கவலைபடாதே உன் வாக்குரிமை உள்ள
மட்டும் முயற்சித்து பார்
என்றாவது விடியலின் கதவுகள்
மெல்ல திறக்கும்..