வேள்வி
கண்ணை உறுத்தும் கனவானாய்....
காரணம் அறிவதற்குள் ரணமானாய்.....
என் நிழலை தொலைவில் இழுத்துச் சென்றாய்
உன் நினைவை அருகில் நிறுத்தி வைத்தேன்!
தோன்றும் கருமேகங்கள் நீயானாய்....
தோகையாகி உன்னை காதலித்தேன்.....
கால்கள் தங்கள் நிலை மறந்து
உனை நாடி நடைப்பழக....
கைகள் கொஞ்சும் வளையணிந்தும்
மௌன மொழி கடைப்பிடிக்க.....
தினமும் உன்னை ஆராதித்தும்
நிதமும் என்னை நீ நிராகரிக்க.....
என்மனம் இன்னும் ஒருமுறை
செய்திடு வேள்வியே என்றது!
என்காதல் இன்றும் உன்னிடம்
வெறும் கேள்வியை நின்றது!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
