தகுதி
வாழ்க்கை நகர்த்த
பண வேஷம் கட்டி
பறக்கிறேன்...!
மணம் விட்டு
சிரிக்க
இயலாமல்
மண்டியிட்டு
அழுகிறேன்...!
செய்யும்
தோழிலில்
தகுதிகள்
தேடிப் பிடித்து
உதட்டை பிதுக்கி
சிரிக்கிறார்கள்..!
உள்ளம்
கனக்கிறது
கண்ணீர்
சிரிக்கிறது...!
பேசாத
வார்த்தைகள்
மவுனத்தால்
ஊமை ஆகிறது...!
தனிமையில்
வேரற்ற
மரமாக
நிற்கிறேன்
உயிர் பிரியும்
நாளுக்காக...!
*******கே.கே.விஸ்வநாதன்*****