யானைப் பசியும் சோளப் பொரியும் !

தொலைபேசி
தொல்லை தரும்

தெரு வாயில்
தீ மிதிக்கும்

மாத பட்ஜட்
மனைவி கையில்
மல்லுக்கட்டும்

மகனுக்கும்
மகளுக்கும்
மனசெல்லாம்
மத்தாப்பூ
வெடி வெடிக்கும்

ஓடி ஆடி
உடலைப் பிழிந்து
உறக்கம் தொலைத்தாலும்

ஊனப்பட்டுத்தான்
போகிறது

ஹிரோஷிமா
ஈன்றெடுக்கும்
இதயங்கள் போல

என்
முயற்சியனும்
முடிவிலிகள்

ஓடுவது
நான் ஆயினும்
துரத்துவது
கடன் ஆயிற்றே ?

எழுதியவர் : பிரகாசக்கவி - (16-Sep-13, 9:33 pm)
பார்வை : 81

மேலே