தலைக்கனம்
தட தடத்து
கட கடக்கும்
ஒரு ரயிலின்
ஒவ்வாத
ஓசை நயமாய் நம்முள் !
முட்டி மோத
முதுகெலும்பில்லா
முறுக்கு மீசையின்
வரட்டு கௌரவம் இது !
யானை போல்
நம்மை
எண்ணத் தூண்டும் !
சிறு
குரங்கு போல்
தாவிப் பார்க்கும் !
தான்
தெரு நாய் என்பதை
ஏற்க்க மறுக்கும் !
பெரும்
ஓநாய் என்று
ஓலம் போடும் !
மமதை
கொள்ளும் !
அகந்தை
ஏற்றும் !
தென்றலென
புயலைச் சொல்லும் !
பஞ்சாகி
நீ பறப்பாய் !
பாவம் என்று
உனைச்சொல்லி
அது சிரிக்கும் !