துளிர்க்கும் ஹைக்கூ -3

சமுதாயம் கருப்பு
வெளுத்த தாடியோடு
பெரியார் சிலை
*/*
விதவையின் வெள்ளாடை
பகுத்தறிவில் வீழ்கிறது
அருவி !
*/*
அரவணைத்த வீடு
கதறுகிறது பத்தாவது மாதத்தில்
பிரசவம்
*/*
நாளைய மன்னர்கள்
இலட்சணத்தை வாசிக்கிறது
முகநூல்
*/*
இளங்கன்றுகளை
கொத்துகிறது நல்ல பாம்புகள்
வன்கொடுமை

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (17-Sep-13, 6:07 pm)
பார்வை : 253

மேலே