பேசட்டும் தன்னோடு
வெட்ட வெளியில் அமர்ந்து
தன்னாலே பேசும் மனிதனை
கிறுக்கன் என்று சொல்லலாமா
வேண்டாம் மனிதனே
அவன் கிறுக்கன் அல்ல
வம்பு வேண்டாம் என்று
அவன் நினைக்கிறான் போலும்
இல்லை பேசி பேசி
எதைக் கண்டேன்
என்று எண்ணுகிறான் போலும்
தன்னோடு பேசி
மனத்தை ஆற்றிக் கொள்கிறான்
பாவம் அவனை விட்டு விடுங்கள்
பேசட்டும் பேசிக்கொன்டிருக்கட்டும்
அல்லலை பகிர்ந்து கொள்ளட்டும்
இன்பத்தில் பங்களிக்கட்டும்
அழுகட்டும் சிரிக்கட்டும்
அனுபவிக்கட்டும் நலன் கருதி
அவன் பேசட்டும் தன்னோடே