அழிவு காட்சிக்கு மட்டுமே காதலுக்கு இல்லை
![](https://eluthu.com/images/loading.gif)
அன்று காலை பேருந்தில் ஏறியதும இடம் கிடைத்தது.என் அருகில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார்.அவர் கையில் ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு கண்ணீர் விட்டு கொண்டிருந்தார்.என்ன ஆச்சு ஏன் ஐயா அழுது கொண்டு இருக்கீங்கன்னு கேட்டேன்.அதற்க்கு அவர் "இவள் என்னோட மனைவி நான் எங்க போனாலும் எப்ப வருவேன்ன்னு அவளுக்கு சொல்லிட்டு போகனும்.நான் வர நேரம் ஆச்சுன்னா பதறி போயிடுவா.ஆனா இப்ப இவள் உயிரோட இல்லை ரெண்டு ஆண் பிள்ளைகள பெத்தவன் நான் எங்க போறேன்னு கேக்க கூட நாதியில்லைன்னு சொன்னார்.சரி விடுங்க ஐயா இப்ப அதை நெனச்சு கவலை படாதீங்கன்னு சொன்னதுக்கு அவர் நான் சின்ன வயசுல அவளை ரொம்ப கஷ்டபடுத்தி இருக்கேன் இப்ப எனக்கு ஒரு கஷ்டம் வரும் போதுதான் அவளோட அருமை தெரியுதுன்னு சொன்னார்.
வாழும் போது சண்டையிட்டுக்கொண்டாலும் கடைசி காலத்தில் பிரிக்க முடியாத காதலை முதியவர்களிடம் மட்டுமே காண முடியும்.அவர்கள் காட்சிக்கு அழிவு உண்டே தவிர காதலுக்கு இல்லை.