மதவாதம் காவிகளும் மிதவாத தொப்பிகளும் .

தீக்குச்சி
தீண்டி
கதிரவந்தான்
கரையுமோ?

பூனைமோதி
யானைதான்
வீழுமோ?

பூமிஅழுது
வானம்தான்
நனையுமோ?

வானம்அழுதால்
பூமிதான்
தாங்குமோ?

காவிகள்
இனவாதக்
கத்திபிடிக்கலாம்!

அதற்க்கு
அரசுஎனும்
அரக்கன்
துணையும்நிற்கலாம்!

பன்றிகள்சேர்ந்து
கூட்டமைக்கலாம்!

இனத்தையே
அடகுவைத்து

பரதேசிகள்
பதவியெனும்
எலும்பு
கடிக்கலாம்!

காற்று
அடிக்கலாம்
புயல்
அடிக்கலாம்

ஆனால்
கடலலைகள்
ஓய்வதில்லையே....

எழுதியவர் : பிரகாசக்கவி எம்.பீ.அன்வர் (18-Sep-13, 10:16 pm)
பார்வை : 250

மேலே