அறிவுக்கண் திறந்தது...

ஒரு நாட்டில் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வணங்கிச் சென்று கொண்டிருந்தனர்.

துறவிக்குக் கிடைத்துக் கொண்டிருந்த மரியாதையைக் கண்டு அந்நாட்டு படைத் தளபதிக்குப் பொறுக்கவில்லை.

ஒருநாள் மாலை நேரம். துறவியைச் சந்தித்த அவன் தன் உள்ளக்குமுறலை அவரிடம் கொட்டினான்.

நாட்டு மக்கள் உமக்கு அதிக அளவில் மதிப்புத் தருகிறார்களே... இது நியாயமா?'' என்று கேட்டான்.

புன்முறுவல் பூத்த துறவி, அவனைத் தோட்டத்துக்கு
அழைத்துச் சென்றார். அங்கே ரோஜா உட்பட பலவகையான வண்ணப்பூக்கள் பூத்திருந்தன.

வானத்தில் முழு வெண்ணிலா ஒளி வீசிக் கொண்டிருந்தது.

"அன்பனே! இந்த ரோஜாப்பூ எப்போதாவது அந்த நிலவைப் போல தன்னால் ஒளி வீச முடியவில்லை என்று வருந்தியது உண்டா அல்லது அந்த நிலாதான் இந்தப் பூவைப் போல இனிய மணம் தனக்கு இல்லையே என்று வருந்தியது உண்டா? அடுத்தவரோடு ஒப்பிட்டு நம் மகிழ்ச்சியை நாம் ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்?'' என்று கேட்டார்.

கண்கலங்கிய படைத் தளபதி, ""துறவியாரே, என்னை மன்னியுங்கள். என் அறிவுக் கண்கள் திறந்து விட்டன'' என்று கூறி விடைபெற்றுச் சென்றான்.புன்முறுவல்


நன்றி! முக நூல்.

எழுதியவர் : கே இனியவன் (19-Sep-13, 9:21 am)
பார்வை : 146

மேலே