அவள் ஒரு தொடர்கதை......
அவளின் பெயர் யாழினி.குடும்பத்தில் இரண்டாவது பிள்ளை.அவளுக்கு ஒரு அக்காவும் மூன்று தம்பிகளும் உள்ளனர்.யாழினிக்கு வயது 33.அவளின் தந்தை நீரிழிவு நோயினால் காலமாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டன.தன் தாயுடன்னும் மற்றும் தன் மூன்று தம்பிகளோடும் ஒரு குடும்பத்தில் வசிக்கிறாள்.தன் மூத்த சகோதரி திருமணமாகி தன் கணவருடன் வாழ்கிறாள்..அவளுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது...
யாழினி,தன் பள்ளி பருவத்தை தாண்டி,இப்போது ஒரு தனியார் நிறுவனத்தில் குமாஸ்தாவாக வேலை செய்கிறாள்..இதற்கு முன் இரண்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்த அனுபவம் உண்டு,அங்கு சரியான ஊதியம் இல்லாததாலும்,படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லாததாலும்,தன் அன்பான அத்தையின் தூண்டுதலால்,இந்த குமாஸ்தா வேலைக்கு சேர்ந்தால்.
இவளின் போராட்டமே தன் தாயிடம் தான்.இவளின் தாயோ,யாழினி சிறு குழந்தையாய் இருக்கும்போதே,அவள் கருமையாக இருக்கிறாள் என்று ஒதுக்கி பார்ப்பாள்.இவளை தன் அத்தை மார்களும் சித்தப்பா மார்களும் தான் பாசத்தை கொட்டி வளர்த்தார்கள்.இவளும் தன் தாயின் பாசம் இல்லாமலே இந்த பருவ வயதையும் தாண்டி விட்டால்.
ஆனால்,இப்போது இவளின் தாய் யாழினியை ஒரு அடிமை பிள்ளையாகவே பார்க்கிறாள்.எல்லா வீட்டு வேலைகளையும் இவளே பார்க்க வேணும்,மாதம் முடிந்தால் சம்பள பணத்துடன் அந்த சம்பள ரசீதையும் காட்ட வேணும்,எங்கேயும் போக கூடாது,அவள் ஆசைபட்டதை வாங்க கூடாது,இப்படி அவளை ஒரு சுதந்திரம் இல்லாமலே அவளை ஒரு வேலைக்காரியை போல் நடத்தி வருகிறார் யாழினியின் தாய்.
யாழினியோ,தன் மூன்று தம்பிகளின் மீது அதிக அக்கறை கொண்டவள்,தன் தாய் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் நடந்துக் கொள்வதை பார்த்து தன் உடன்பிறப்புகள் வேதனை படுவதை அவளாலும் தாங்கமுடியவில்லை.முடிந்த அளவுக்கு,அவளே ஒரு தாயை போல தன் சகோதரர்களுக்கு பணியாற்றுவால்.
தன் மூத்த சகோதரன் யாழினியின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தான்.தனக்கு என்ன தேவையோ,யாழினியிடம் தான் கேட்பான் .அதே போல தான் யாழினியும்,தனக்கு என்ன வேண்டுமானாலும் தன் தம்பியிடம் தான் கேட்டு பெற்று கொள்வாள்......
இப்படி தன் பிள்ளைகள் மீதும்,குடும்பத்தின் மீது கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் ஒரு சுயநலவாதியாய் யாழினியின் தாயார் இருக்கிறார். கல்யாண வயதில் 4 பிள்ளைகளும் இருக்கிற சமயத்தில் தான் உடுத்தினால் போதும்,தான் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தில் ஒரு கடமையுணர்ச்சி இல்லாத தாயாக இருக்கிறாள் யாழினியின் தாயார்.
யாழினி ,ஒவ்வொரு நாளும் எப்படி இந்த குடும்பத்தை கரை சேர்க்க போகிறோமோ என்ற அச்சத்திலே தன் வாழ்க்கை பயணத்தை தொடர்கிறாள்.தினமும் கடவுளிடம் தன் தாயும் எல்லா தாயை போலவே இருக்க வேண்டும் என்று வேண்டிகொல்வால்.......
ஒரு குடும்பத்தில் தாய் பாதை மீறி போனால் அந்த குடும்பம் குடும்பமாகவே இருக்காது.அனால்,இருந்தும் நானோ அல்லது என் சகோதர சகோதரியோ இதுவரை குடும்ப பேரையும் என் அப்பாவின் பேரையும் காப்பற்றி கொண்டுதான் வருகிறோம்.எத்தனை பேர்கள் தன் தாயை தெய்வமாக போற்றும் இந்த காலத்தில் எங்களுக்கு இப்படி ஒரு குணம் கொண்ட தாயை கொடுத்துவிட்டாயே என்று தினமும் மனம் குமுறிக்கொண்டு இருக்கிறாள் யாழினி......