அறிவழகியின் வேண்டுதல் ....!

எ பேரு அறிவழகி..!

நா 3 rd standard B படிக்கற

அப்பா என்ன அறிவு அறிவு
அப்படிந்தா கூப்பிடுவாரு...!

நாளைக்கு எனக்கு birthday..

அப்பா 6 மணிக்கு வந்து
வெளியகூட்டிட்டு போறன்னு
சொல்லிருக்காரு,அதுமட்டு இல்ல..!

நீ என்ன ஆசப்பட்ரையோ
வாங்கிக்கோன்னு சொல்லிருக்காரு..!

எனக்கு..!
கேக் வாங்க ஆச இல்ல!
படத்துக்கு போக ஆச இல்ல!
புது துணி வாங்க ஆச இல்ல..!
பொருட்காட்சி போகவும் ஆச இல்ல!
ஹோட்டல் போய் சாப்ட ஆச இல்ல!

பக்கத்து வீட்டு ராமு அங்கிள் மாறி
வெளியூருக்கு போக ஆச இல்ல...!

இதுல எத நா அப்பாகிட்ட கேட்டாலு
கண்டிப்பா வாங்கித்தருவாரு...!

காசு இல்லாட்டி
முருகேஷ் அங்கிள்
கிட்ட காசு வாங்கி வாங்கித்தருவாரு...!

ஆனா நா ஆசப்படரத
அப்பா செய்ய மாட்டரு....!

இன்னைக்கு மட்டு
அப்பா என்னோட
அப்பாவாவே வந்தா எப்படி இருக்கு?????

நைட் அம்மாவு அப்பாவு சண்ட போடாம,
நாங்க மூணு பேரு மொட்டமாடில
ஜாலியா இருப்பமே....!

காலைல நானு அப்பாவு
சைக்கிள்ல எல்லா இடத்துக்கு போவோமே..!

ஆனா அப்படில நடக்காது....!


எ சொல்லுங்க
இப்ப மணி 8.45...

என்னோட அப்பாக்கு மட்டும்தா இப்டினூ
ரொம்ப நாலா பயந்துட்டு இருந்த ...!

ஆனா
பக்கத்து வீட்டு ரோசி அப்பா,
எதிர் வீடு பாத்திமா அப்பா
அப்பரோ schoolல பானு,சுரேஷ்,சந்ரு
அவங்க அப்பாவு இப்படி தானம்மா .......

காலைல நல்ல இருப்பாங்களா,
நைட் ஆனா அம்மாகூட சண்ட,
நரையா டைம் இவங்களையு அடிப்பாங்கலாமா...!

அப்பரோ காலைல
எப்பவு போல மாறிடுவாங்கலாமா....!

இத படிச்சுட்டு நீங்களாவது
எங்க அப்பாகிட் சொல்லுங்க...!

எப்பவு என்னோட
அப்பாவவே இருக்க சொல்லுங்க...!

உங்க வீட்டு பக்கத்துல
இப்படி ஒரு அப்பா இருந்த
அவங்ககிடயு சொல்லுங்க...!

இந்த மழலைக்காக

இவள் தந்தை உயிரை கேட்டாலும் விட்டுவிடுவார்...!
பிள்ளையின் மனம் வாடினாலும்
தன் மானம் போனாலும்
மதுவை விடுவதாய் இல்லை...!

மதுபானக்கடையில் கூட்டம் கூட்டமாக
மது வாங்குபவரின் பிள்ளைகள்

ஒவ்வொரு காலையிலும்
கோவிலுக்குச்சென்று வேண்டுவது...!

சாமி!..
இன்னைக்காவது
அப்பா
குடிக்காம
வரணும்...!

பலவருடம் கழித்து பார்...!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நீ நிற்கும் கடை வரிசையில்
உன் மகனும் நிற்கலாம் ...!

எழுதியவர் : பா.பரத் குமார் (20-Sep-13, 5:13 pm)
பார்வை : 90

சிறந்த கட்டுரைகள்

மேலே