நல்ல தம்பதி.
![](https://eluthu.com/images/loading.gif)
நல்ல தம்பதி நீவீரே!,
இல்லஞ் சிறக்க வாழ்வீரே!.
எல்லாம் பெற்று நலமாக,
இனிக்க இனிக்க வாழ்வீரே!.
குடும்பம் என்று கொண்டாலே
குறுஞ் சிக்கலும் வருந்தானே!
ஒருவரை யொருவர் புரிந்துமே
ஒன்றின் உறுமோ பருவாவே!
அதிகாரம் கூடி ஓரிடத்திலே
அதிகம் சுமக்க முயலாதீர்!
சமமாய்ப் பொறுப்பும் உணர்வீரே!
சகசம் வாழும் காலமெலாம்.
கலந்துபேசியும் முடிவுகளை
காலங்கணித்து எடுக்கணும்.
நிலவும் உண்மை மட்டுமே
நெஞ்சில் நம்பிக் கொள்ளணும்!.
உரிமையெனவும் மதிக்கையில்
இருவருக்கும் அது பொதுவுதான்.
இருவரும் ஒருங்கி ஒருமையாகி
இயல்பாய்ச் சேர்மமாகும் தம்பதி.
நன்மை மகவும் ஆக்கிடுவீர்!
நாடு போற்றவும் வளர்த்திடுவீர்!.
தமிழே கற்றுப் பிற மொழியும்-
தரமாய்க் கற்கச் செய்திடுவீர்.!
கொ.பெ.பி.அய்யா.