என்னவள்

சொல்லிகொள்ளும் அளவிற்கு
அழகில்லை தான் - ஆனாலும்
அவள் எனக்கு அழகு
அவளின் கண்களில் சிக்குண்டவர் பலர்
சிதையுண்டவர் சிலர்
அவளின் சிரிப்பில் ஆசைப்பட்டவர் பலர்
ஆவேசபட்டவர் பலர்
அவளின் பேச்சில் ஆனந்தம் கொண்டவர் பலர்
ஆத்திரம் கொண்டவர் சிலர்
அடடா இந்த சிலரும் பலரும்
ஏன் எனக்கு
மெச்சிக்கொள்ளும் அளவுக்கு அவள்
அழகு இல்லையென்றாலும்
என்னவளே நீ எனக்கு அழகு தான்

எழுதியவர் : கதிர்தென்றல் (21-Sep-13, 4:49 am)
Tanglish : ennaval
பார்வை : 82

மேலே