நீயும் காகமும்
அன்பே ..
நீ
தண்ணீர் தொட்டி மீது நின்று
" கா " " கா" வென
சங்கீதத்தால்
சாதம் வைக்கிறாய் காகத்துக்கு ....!
உன்
சங்கீதக்குரல் கேட்க
குயில்களும் மயில்களும்
காகங்களாக மாறி
தவம் இருக்கின்றன
உன் வீட்டு தந்திக்கம்பங்களில் ,,,,,!
அது சரி
தொட்டி மீன்களுக்கு
என்ன மந்திரமிட்டாய் ....?
நீ
கூவி
அழைக்காமலேயே
நட்சத்திரங்களாய்
கண் சிமிட்டி
நடனமாடி மகிழ்கிறதே ...?
சரி .. சரி
சீக்கிரம்
கீழே இறங்கு
மீன்களுக்கு வெட்கம் வந்துவிடப்போகிறது ...?