குளு குளு காத்து குத்தால காத்து
சிலு சிலு காத்து
சிங்கார காத்து
சிரிக்குது என பாத்து!
குளு குளு காத்து
குத்தால காத்து
குதிக்குது என பாத்து!
மழைக்கால காத்து
மண்வாசன சேத்து
நம்மீது வீசும் –அந்த
மண்வாசம் மனசோடு பேசும் !
வெயில்கால காத்து
வெப்பத்த சேத்து
அனலாகத்தான் வீசும்-நம்
கண்ணெல்லாம் கூசும் !
குளிர்கால காத்து
பனிவாட சேத்து
பல்லெல்லாம் நடுங்கும்
உடம்பெல்லாம் சிலிர்க்கும் !
சுளு சுளு காத்து
சூறாவளி காத்து
சுருட்டிக்கொண்டு போகும்
எல்லாமே சேத்து !
புயலென வீசும்
புளுதிகாத்து வேரோடு புடுங்கி
வீசிடும் விசக்காத்து !
பேய் காத்து சிலநேரம்
பேயாட்டம் போடும் –மரங்களின்
ஆணிவேர்கூட நாட்டியம் ஆடும்
தன்னம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன் .

