துளிப்பா புகை

கள்ளக்காதல்
ரசித்து சுவைக்கிறது இதழ்கள்
புகைப்பழக்கம்
-/-
பலாத்கார காதல்
பதற்றத்தில் நுரையீரல் திணறுகிறது
பீடி
-/-
இறுதி ஊர்வலம்
பயற்சியெடுக்கும் வெள்ளைச்சங்கு
சிகரெட்
-/-
தெய்வம்
புற்றுநோயால் நின்று கொல்கிறது
சுருட்டு
-/-
புகைக்காதே !
எழுதும் கவிஞனின் இடதுகையில்
புகைப்பேனா!!
-------------------------->இரா. சந்தோஷ் குமார்