தோகை வள்ளல்

தேயும் நிலவு வானில்
தேயாத நிலவு பூமியில்
நீ என்றேன்

நிலவு தேய்வதும் இல்லை
நாளும் வளர்வதும் இல்லை
என்றாள்

அறிவியலா என்றேன்

இல்லை இலக்கியம்தான் என்றாள்

நீலவானம் ஒரு நாள் நிலவைப் பார்த்து
ஆடையின்றி உலவுகிறாயே வெட்கமில்லையா
என்று சிரித்தது.
அன்று முதல் இரவுத் துகிலை ஒவ்வொரு நாளும்
இழுத்து இழுத்து மூடிக் கொள்கிறாள்
நிலவவள் வெட்கத்தில்.

அருமை இனிமையான விளக்கம்
தோகை மயிலுக்கு போர்வை கொடுத்தான்
வள்ளல் மன்னன் அன்று
நிலவுத் தோழிக்கு துகில் கொடுத்தாய்
தோகை வள்ளல் நீ இன்று
என்றேன்

ஆஹா என்று அதிர்ந்து சிரித்தாள்
உன்னை வெல்வதற்கில்லை
கவிஞனே
வார்த்தைகளின் வள்ளல் நீ
என்றாள்

~~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (21-Sep-13, 8:18 pm)
பார்வை : 66

மேலே