கைவிலங்கு

திரை மறைவில்
தினம் தினம்
பண ஓலையில்
பல் குத்துகிறான்...!

பஞ்சம் பேசி
பன்னீர்
தெளித்து..!
படகுக்காரனாய்
ஏழையின்
வயற்றில்
தூண்டில்
வீசுகிறான்...!

சந்தனம்
கமகமக்க
சாலையில்
நடப்பான்,
நேற்றிரவு
செய்த
கொலை
மறந்து...!

பசிக்காக
கை வைப்பவனுக்கு
பத்து வருடம்மும்..!

மேடை பேச்சில்
மயக்க வைத்து
தாம்பூலம் மணக்க
தவறு செய்பவனுக்கு
பயந்து பயந்து
பாதுகாப்பு...!

கைவிலங்கு
பூமாலையாக
உரு மாறுகிறது...!

******கே.கே.விஸ்வநாதன்*****

எழுதியவர் : கே கே விஸ்வநாதன் (21-Sep-13, 11:10 pm)
பார்வை : 169

மேலே