மனிதனை திங்கும் மானிடா...!

என்று மாறும் இவ்வவலம் ?

தேடிக்கிடைப்பதற்கும்
உழைத்து உண்பதற்கும்
ஏதுமில்லா தூரங்கள்....!
எட்டாப் பார்வை கொஞ்சம்
இவர்களிடம் நிழலாடுகிறது..!

இடைதிறந்து குடிக்கும் பால்
இருக்குமா என்ற சந்தேகத்தோடு
சஞ்சரித்து ஜாடைபேசியும்
சலனமில்லா அவலமாய் நான்..!

பற்றி யெறியும் பசியில்
கொன்று உண்பதற்கு
எனைப்போன்ற பசி கொண்ட
மனிதனை தவிர எதிரே
வேர ஒன்றுமில்லை..!
இவர்களுக்கு..!

கை நீட்டி கேட்கவும்
வாய் திறந்து அழுகவும்
உணர்வுகள் இருந்தும்
இடைவேளி எல்லை..!
பாஷை இனி இல்லை..

இந்திய தேசம் எம்தேசம்
என உறவுகொண்டாடி,
பிணம்தோண்டி,
பணம்தின்னும்,
உறவே..!

இமைகள் ஈரமாகட்டும் ?
இவர்களைபோல் இனி
இல்லா நம்மிந்தியதேசம்..!
உருவாகட்டும், உள்ளுக்குள்
சலனமற்ற சடலங்களோடு
சலும்பார் என்ற மலைவாழ்
ஏழைமக்களோடும்...!
ஏக்கங்களோடும்...!
சமூகக்காவலன்
மதுரை வாசகம்..

எழுதியவர் : மதுரை வாசகம் (22-Sep-13, 10:45 am)
பார்வை : 91

மேலே