காதல்..

முதல் நாள் தான் உன்னை பார்த்தேன்
எப்படி நான் இப்படி ஆனேன். . .
சிறைச்சாலையில்
சிக்கிய கைதியைபோல்
மனம் துடிக்கிறது. . .
உன் உதட்டு மச்சத்திலும்,
சிரிக்கும் சிங்கப்பள்ளிலும்
மயங்கி இருப்பேனோ?,,
தினம்தினம்
கனவுகள் நிறைந்த
என் விழியில்
உன் படம் மட்டுமே அரங்கேறும் . . ,
நிலவோடு உன் முகத்தை ஒப்பிடுகையில் அம்மாவாசை தடுத்தது,, .
காரணத்தோடு வந்தால் அதன் பெயர் காதல் இல்லையாமே.....
என் காதலுக்கும் காரணம் தெரியாது..
உன்னை பற்றி பேசிபேசி காலம் கடந்தது
இனியும் பொறுக்கமாட்டேன் ,,
பேனா எடுத்தேன் ஒரு கவிதை தொடுத்தேன் உன்னிடம் கொடுத்தேன். .
நல்ல, வேலை இல்லை
இருந்தாலும் கரம் பிடிக்க நினைக்கிறது இந்த கரை படியாத இதயம்....
[ காதலில் சிக்கிய என் நண்பன் சிவாவுக்கு சமர்பிக்கிறேன் ]