நட்பு !
நல்ல நட்பே ! வயதில் உன்னைவிட
இளையவனாய் போய்விட்டேன் !
இல்லையெனில் உன் பூ போன்ற மனதை
புன்னகையால் மலர செய்து - எந்த ஒரு
வலியின் பிம்பத்தையும் உணராமல்
பத்திரமாய் பார்த்திருப்பேன் !
உன் கவிதை மனதை மெல்லிய
ரோஜா இதழ்கள் போல் என் அன்பால்
அரவணைத்து உன்னை அதிகமாய்
ஆனந்தமடைய செய்திருப்பேன் !
என்ன செய்ய காலம் நம்மை ஏமாற்றி விட்டது!
பரவாயில்லை உன்னுடன் எனக்கான
நட்பினை ஆண்டவன் தந்தான் ! மிக பெரிய
சந்தோசம் ஒரு நல்ல நண்பனாய் -உன்
மனதை எவ்வளவு சந்தோஷ படுத்த முடியுமோ
அவ்வளவு சந்தோசமாய் வைத்திருப்பேன்
என் அன்பினை காட்டி ! ஆம் நட்பே !