+ஏன் அழறே? அழாதே!+

காரணமின்றி அழும்
ஒரு சிறு குழந்தையின் முன்பு
எத்தகைய பொறுமைசாலியும்
பொறுமையிழந்துவிடுவான்!
குழந்தைக்கோ ஒரு காரணம் இருக்கும்!
ஆனால் இவனுக்கோ அது புரியாது!

'ஏன் அழறே? அழாதே!' என
பொறுமையாக ஆரம்பிப்பான்...
ஒரு கட்டத்திற்கு மேல்
'அழாதே''அழாதே' என‌
அதட்டும் தோரணையில் இவன் குரல்
கோபமாய் வந்துவிழும்!

தன் காரணத்தையும் மறந்து
அழுகையை நிறுத்த இருந்த குழந்தை..
இவனது அட்டகாசத்தைக் கண்டு
மிக அதிகமாய் மீண்டும் அழ ஆரம்பிக்கும்..!

அதற்கு மீண்டுமொரு காரணம் கிடைத்துவிட்டது..
இவனுக்குத்தான் இதுவரை ஒன்றுமே புரியவில்லை..!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி ‍‍‍ ‍‍‍‍‍‍‍ (24-Sep-13, 10:35 pm)
பார்வை : 73

மேலே