முகநூல் காதலால் சுற்றலில் விடபட்ட என் காதல்
ஒரு கிளையில் பூத்த இரு பூக்களை
பறிக்க என் சிந்தனை இல்லையே
அன்பே-ஒரு கிளையில்
பூத்த ரோசா நீ மட்டுமே என்
சிந்தையின் விடிவெள்ளி உன்னிடம்
சிரம் தாழ்த்தி உனக்காக நிற்கிறேன்
வெள்ளிலா சிலை அவள் தன்னில்
செப்பமாக வடித்தெடுத்த
செமேனியில் சிறிடைமேல்
சிறுகிடிக்ககும் செம்மேன்குன்று
உடைத்த வெள்ளி போன்ற உன்தெத்தை
பல்லில் என் உள்ளம் அடிபட்டு கிடக்குது
நீ என் காதலை காற்றிலே
சுற்றவிட்டு சுயநலமா நீ
சுற்றையிலே என் காதல்
சுத்தியால் அடிக்கப்பட்ட ஆணி போல்
அழுகுதடி உன் பின்னால்
உனக்கு என்னை பிடிக்காவிட்டாலும் என்
உள்ளக்குமுறல் புரியவில்லையா அன்பே
உனக்காக நான் ஏங்கையிலே நீ
முகநூல் நட்புடன் காதலாகி
காமத்தை மட்டுமே உன்னிடம் எதிர்பார்த்த
காதலிடம் தோற்றது உன் வெகுளிதனமே
உன் நினைவில் என்வாழ்க்கை
உயிர்வாழ் என்று நினைக்குதடி நீ
சம்மதித்தால் உன் வாழக்கையுடன்
சமமாக பகிர என் உள்ளம் இன்றும்
திடமாக உள்ளது என் அன்பே