புகார்

திருடு போய்விட்டது
என்று புகார் செய்தார்

திருடப்பட்டது
இதயமென்றார்

காதலிக்கும்போது
காணாமல் போனதென்றார்

திருடியது யாரென்று நன்றாய்
தெரியுமென்றார்

அவளை சிறைபிடிக்க
வேண்டுமென்றார்

சிறைபிடித்து அவள் இதயத்தில்
சிறைப்பட வேண்டுமென்றார்.

எழுதியவர் : பால்ராஜன் ராஜ்குமார் (3-Jan-11, 10:55 pm)
சேர்த்தது : paulrajanrajkumar
பார்வை : 336

மேலே