வாழ்க்கை
காணும் கனவுகளெல்லாம் காட்சியாகிவிட்டால்
கடவுளை நினைப்பார் யார் ?
உள்ளம் சொல்லும் உண்மையை
உலகறியச் சொல்லிவிட்டால்
நீயே உன்னதமானவன் .
கடவுள் என்று சொல்லி காமம் பழகுவோரிடயே
கயவன் என்று பழிக்கப்பட்டவன் மேலானவன் .
எண்ணம் மேலானால்
வாழ்வு மேலாகும்
வாழ்க்கையிலே இன்பம் என்பதும் துன்பம் என்பதும்
இரவும் பகலும் போலாகும்
இன்பம் மட்டும் வேண்டுமென்றால் இயற்கை ஏற்காது
துன்பம் என்றும் நிரந்தரமில்லை .
வரும் காலம் நிச்சயம் என்றால்
நாளைய விடியல் மகிழ்ச்சி தரும்
என்பதும் நிச்சயமே.