கைபேசியதில் பருவகாதல்
கண்களில் மை பூசி
களவாய் கைபேசிகளை
பைகளிலே போட்டுவிட்டு
கைகளால் கட்டுடனே பற்றி
காதல் லீலைகள் பல புரியும் கன்னியே
பேச்சினில் காதலை கனியுடன் பேசி
கண்ணிமைக்கும் பொழுதினில் நீ
sms போட்டு காசினை காலி செய்ய
கடைசிவரைக்கும் ரீலோர்ட் போட்டே
கந்தறுந்து நிற்கும் காளையனே
காதல் மகள் நிலைகுலைந்தாள்
கன்னியவள் கனியை
பறிக்க என்னும் காம கணைகள்
எண்ணத்தை பறிக்க கற்புடன் இருந்த
காதல் கரைபிரண்டு ஓட
காடுடைத்து நிற்குது அனாதை
குழந்தை வெள்ளம்