+கொஞ்சம் சிரித்து விட்டுப்போ!+

ஆனாலும்
கொஞ்சம் சிரித்து விட்டுப்போ!
நீ இழப்பது எதுவுமில்லை!

கொஞ்சம் புன்னகை சிந்திவிட்டுப்போ!
காசா பணமா....!!

பணமில்லாததால் தான் இவன் ஏழை!
மனதினால் இவனும் ஒரு செல்வந்தனே!

உன்னிடம் மனமுண்டு
மனதினால் நீ ஏழையில்லை
என்பதற்காகவாவது
கொஞ்சம் அன்பை பகிர்ந்து விட்டுப்போ!

வியர்வை சிந்தி உழைக்கும்
எந்தவொரு உழைப்பாளியை பார்த்தாலும்
ஆசையாய் கொஞ்சம் பேசி விட்டுப்போ!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி ‍‍‍ ‍‍‍‍‍‍‍ (28-Sep-13, 3:14 pm)
பார்வை : 68

மேலே