உலக காபி தினம் ( 29.09.2013 )

​காலை மலர்ந்தால் காபி
களைப்பு நீங்கவும் காபி
விடிந்தவுடன் பருகும் காபி
துடிப்புடன் இருந்திட காபி !

தலைவலி குறைய காபி
உற்சாகம் பிறந்திட காபி
சுறுசுறுப்பு அடைய காபி
சுத்தமான பில்ட்டர் காபி !

அளவோடு அருந்திடுக காபி
வெள்ளமாய் வேண்டாம் காபி
புத்துணர்வு பெற்றிடவே காபி
புதுமைகள் தோன்றிடும் காபி !
உலக காபி தினமாம் இன்று
உடனே குடியுங்கள் காபி !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (29-Sep-13, 4:05 pm)
பார்வை : 254

மேலே