ஈமானை தந்த கோமான் நபியே !
ஈமானை தந்த கோமான் நபியே !
மக்கா நகரில் பிறந்தாராம்
மக்கள் மனதில் சிறந்தாராம் !
ஏந்தல் நபிகள் வந்தாராம்
ஏகன் இறையை சொன்னாராம் !
அறம் புதைந்த நகரிலே
அறமாய் வந்த நாயகராம் !
நீதிக் கென்றே நின்றவராம் - நல்
நேர்மைகள் எல்லாம் பெற்றவராம் !
பெண்ணின் வாழ்வை போற்றியவராம்
போதையின் பாதையை மாற்றியவராம் !
செயலால் எதையும் காட்டியவராம் !-அது
அல்லால் சொல்லை வெறுத்தவராம் !
ஏகன் அருளில் நிறைந்தவராம் !
ஏந்தும் மாமறை தந்தவராம் !
விதவைக்கு வாழ்வு தந்தவராம் !- அதை
விதையாய் விதைத்த சிந்தகராம் !
மண்ணும் உலகில் மனிதற்கு
விண்ணின் வாழ்வை தந்தவராம் !
நேர்மை வழியில் வந்தவராம் !
"நூறாய்" நின்று சிறந்தவராம் !
மண்ணில் உயர்ந்து நின்றாராம் !- இறையை
விண்ணில் சென்று கண்ட்டாராம் !
அகமது பெயரை கொண்டவராம் !- எங்கள்
அகமதில் நிறைந்தே நிற்பவராம் !
பாலைக்கு வந்த சோலையாம் !- அது
பாருக்கு வந்த ஜோதியாம் !
ஈமானை தந்த கோமானாம் !
பூமான் எங்கள் பெருமானாம் !
மதினா வாழும் மாமணியாம் !-எங்கள்
மனதில் வாழும் பூமணியாம் !
பொறுமை கொண்டே நின்றவராம் !
மறுமை வாழ்வை வென்றவராம் !
ஏகனின் தூதாய் வந்தவராம் ! - எங்கள்
உயிரின் மேலாய் நிற்பவராம் !!
நட்பில் nashe