மின்வெட்டு
மின்சாரம் இல்லாத நேரம்
நான் காத்திருந்த மாலை வேளையில்
மின்னலைப்போல வந்தாள்
மனங்கவரும் மலர்விழி
மங்கையின் பூகரம்
ஸ்பரிசத்தில்
மின்சாரம் பாய்ந்தது என் கரத்தில்
அல்ல
என் இதயத்தில்