நாடகமா உலகம்
நாமெல்லாம் நடிகர்களாம்
அவன் பெரிய நாடகாசிரியனாம்
அரங்கில் நுழையும் எல்லா நடிகரும்
அழுதுகொண்டுதான் நுழையனும்
அழுதுகொண்டு வராவிட்டால்
அடிதான் உடனே கதறனும்
நாமெல்லாம் நடிகர்களாம்
அவன் பெரிய நாடகாசிரியனாம்
எல்லோரும் உலக மேடையில்
யார்தான் பார்வையாளர்கள்
இல்லாத ரசிகர்களுக்காய்
நாம்தான் வேர்வையாளர்கள்
நாமெல்லாம் நடிகர்களாம்
அவன் பெரிய நாடகாசிரியனாம்
சுழன்று உழன்றுத் திரிகிறோம்
எங்கே தடுத்து நிறுத்தப்பட்டு
எந்தத் திசை நோக்கி உதைப்படுவோம்
சிந்திக்க முடியாப் பந்துகளாய்
அலறி அலைந்து கதறிக் குலைந்து
நாமெல்லாம் நடிகர்களாம்
அவன் பெரிய நாடகாசிரியனாம்ே
என்ன கதையிது தெரியவில்லை
எந்தன் பாத்திரம் புரியவில்லை
எங்கள் வசனம் கொடுக்கவில்லை
நாமே நடத்தும் நாடகமா
நாமே பார்வையாளர்களா
நாடகாசிரியன் ஒருவன் வேண்டுமென்று
நாமே அவனைப் படைத்தோமா
இப்படியும் ஒரு நாடகமாம்
நாமெல்லாம் நடிகர்களாம்
அவன் பெரிய நாடகாசிரியனாம்