கேளுங்கள் மாணவர்களே!
கல்லூரி வாசலில்
கல்விதனை கற்க வந்த
கட்டிளம் காளைகளே!
காசுபணம் செலவாக்கி
காலத்தை வீணாக்காமல்
காவியம் படைக்க முயலுங்கள்
கிடைக்கும் நேரத்தை
கிட்டாத பொருளாக எண்ணி
கின்னஸ் சாதனை படையுங்கள்
கீர்த்தி பெற்ற தமிழ் மன்னர்களே!
கீத தமிழ் மொழிக்கு
கீரீடம் சூட்டுங்கள்
குலத்தாலும் மதத்தாலும்
குடும்பம் தவிர்க்காத
குணவான்களாகத் திகழுங்கள்
கூட்டுக் குருவிகளாய் இராமல்
கூவி மகிழும் குழந்தைபோல்
கூடி நன்மை செய்யுங்கள்
கெடுதி செய்யாமல்
கெட்டத்தனம் இல்லாமல்
கெட்டிக்காரர்களாய் விளங்குங்கள்
கேலி செய்து காலம் கடத்தாமல்
கேணி நீர்போல்
கேட்பவர்க்கு உதவுங்கள்
கைகேயி போல் இல்லாமல்
கைகொடுத்து உதவி
கைங்காரியம் பல செய்யுங்கள்
கொக்கரிப்பதை நிறுத்தி
கொடுமை செய்வதை விட்டு
கொடை வள்ளல்களாக இருங்கள்
கோடி கொடுத்தாலும் கிடைக்காத
காலத்தை
கோசம் போட்டு வீணாக்காமல்
கோவில்போல் எண்ணி நற்கல்வி
பயிலுங்கள்
கௌசலிகை (கொடை) பல செய்து
கௌரவத்துடன் வாழ என்னுடைய
கௌசலங்கள் (வாழ்த்து) பல.......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
