மீண்டும் ஒருமுறை உன்னை மகனாய் பெற்றெடுக்க..
வண்ண வண்ணமாக
வாழை இலையில் உணவு
படைக்க வேண்டாம்
ஒவ்வொரு முறை
கதவு தட்டி உள்ளே வரும் போதும்
என் மனக் கதவை தட்டி
ஆசையாய் பாசமாய்
அம்மா என்று அழைக்காவிட்டாலும்
பரவாயில்லை..
என் முந்தானையை பிடித்து
நீ அலைந்த காலத்தில்
அம்மா என்று அழைத்ததை
நினைத்து அசை போட்டுக் கொள்கிறேன்
அது போதும்
இந்த ஏழை மனம் சந்தோஷப்பட...
ஆனால்
என்னை முதியோர் இல்லத்தில்
சேர்ப்பேன் என்று நீ
சொல்லாமல் இருந்தால் அது போதும்..
நான் உன்னை மீண்டும் ஒரு முறை
மகனாய் பெற்றெடுத்த சந்தோசத்தில் திளைக்க...