நான் ஒரு பைத்தியக்காரி!

என்னை மறந்துவிடு என்று
என்னில் நீ அம்பை எய்தினாலும்
அந்தத் துவாரத்தினூடாக வடியும்
ஒவ்வொரு துளி இரத்தத்திலும்
உன் பெயரை எழுதிப் பார்க்கும்
ஒரு பைத்தியக்காரிதான் நான்.

எழுதியவர் : என்,ஜனா (1-Oct-13, 11:52 am)
பார்வை : 142

மேலே