எழுத்து நட்பே எழுந்து வா..!

எழுத்து தோட்டத்தில் தினமும்
என் கால் பதித்து உலாவருவேன்
பூக்கவில்லை என்றாலும்
பூரிப்பாய் செடி கண்டால்
புது பூக்கள் கிட்டுமென்று
புன்னகைத்து சென்றிடுவேன்..!
சில செடிகள் தினம் பூக்கும்
சில பூக்கள்..!
சில செடிகள் தினம் விட்டு
ஒரு பூவாய்..!
ஒரு செடியை காணவில்லை
ஓடி ஓடி தேடிபார்த்தேன்
ஓரிடமும் காணவில்லை..!
ஓயாத எண்ணத்தால்
ஓடிய கால் தடம்பார்த்து
எப்படியோ கண்டுவிட்டேன்..!
என்றும்போல் ஏறிய மாடிவிட்டு
எட்டு வைத்து இறங்கியதாம்
படிதட்டில் தடுமாறி கால்வைத்து
பாழ் தரையில் விழுந்ததாமே..!
கால் எலும்பு முறிவென்று
கட்டுடனே கட்டிலில் அசையாது
கடைசியில் செய்தி கண்டேன்
கண்டுவிட்டேன் அச்செடியை..!
கண்டிப்பாய் ஒய்வுவேண்டும்
கருத்தாய் மருத்துவர் சொன்னதனால்
கடினமுடன் இருகின்றேன்..
கவலை வேண்டாம்.. கால்பதித்து
காலம் செல்லாது கவிதையுடன்
களத்தில் வருவேன் என "நட்புகளுக்கு"
கவிதை செடி செய்தி சொல்ல
இங்கு அச்செடிதேடும் நட்புகளுக்கும்
இதோ எத்திவைத்தேன் அச்செய்தி..!
“படி விட்டு அடி சறுக்கி
அடி பெற்று குடில் இருக்கும்
நட்பான ‘ப்ரியாஅசோக்’
நலம் பெற்று கவி அடியோடு
கால் பதித்து கவி வடிக்க
விரைவாக வர வேண்டும்..
வரம் கேட்டு இறை வேண்டி
கரம் நீட்டி பிரார்த்திப்போம்..!"
"ப்ரியாவுக்காக" பிரார்த்தியுங்கள்..!
(இந்த பதிவுக்கு தேர்வு புள்ளிகள் வேண்டாமே)
நட்புடன் குமரி