சர்வதேசத்தில் அழகு ராணிகள்
உள்ளாடைகளில்
கண்ணுக்கு விருந்தளித்து
கூச்சமின்றிப் புன்னகைக்கிறார்கள்
அழகு ராணிகள்.................!
அழகுடலை விளம்பரமாக்கி
அரைகுறையாய் நடந்துவந்து
பார்ப்பவரைப் பூரிக்கவைக்கிறார்கள்
அழகு ராணிகள்.................!
தமிழ்ப் பண்பாடு மறந்து
மேல்நாட்டு மோகத்தில்
காட்சிப் பொருளாய் கலக்குகிறார்கள்
அழகு ராணிகள்..................!
பெருமிதம் கொள்கிறது தாய்நாடு
விலைபோன பண்பாட்டுக்காகவா
வரமான வெறும் பட்டத்துக்காகவா..!
--------------------------------------------------------------
தோழி துர்க்கா