கொசு

கண்ணுறங்கும் நேரத்திலே, காதருகே வந்து ரகசியம் சொல்லும் காதலன் நீ;
இமை இரண்டும் சோகத்திலே தூங்கும் நேரம்
இடையினிலே நீ என்னை வந்து தீண்டும் நேரம்;
ஒய்யார நடைபோட்டு வரும் இந்த கள்வனை ஒருவரும் காணமாட்டார்,
ரத்த பரிசோதகனும் தோற்று விடுவான் உன் முன்னே;
ஆசை அடி கொடுத்தேன், நீ ஈசன் அடி சேர்ந்தாய்,
வஞ்சம் தீர்க்க வந்தான் உன் மகன், மீண்டும் என் காதில் ரகசியம் சொல்ல, மெல்ல, மெல்ல ...............

எழுதியவர் : பிருந்தா (2-Oct-13, 12:41 pm)
Tanglish : kosu
பார்வை : 80

மேலே