மகாத்மாவின் பிறந்ததினம்.

மகாத்மாவின் பிறந்ததினம்.


மகாத்மாவின் பிறந்ததினம் இன்று!

காந்தி என்பது ஓளியே!

ஆத்மாவும் ஒளியன்றி வேறன்று!!

மகாத்மா ஒளிமய நல்வழி!!!!!

அஹிம்சையும் சத்தியமும்

ஆத்மாவை அறிவிக்கும் சாதனைகள்!

சாதனையின் இடையே சோதனைகள்!!!

அவ்வப்போது அச்சுறுத்தும் வேதனைகள்!?!?!

அவையாவும் தாற்காலிகமாக வந்து போகும்!!!!

நாம் நிரந்தரமாக சாதனையில் நிற்கிறோம்.

நிரந்தரம் தன்னையே தரும் தன்மையது!

உண்மையே நிரந்தரம்! உன்னில் அது சுதந்திரம்!

உண்மை உள்ளன்பே! அன்பே அஹிம்சை!

அதுவே சத்தியம்! ஆத்மாவின் நித்தியம்!

பாலு குருசுவாமி.

எழுதியவர் : பாலு குருசுவாமி. (2-Oct-13, 1:03 pm)
பார்வை : 65

மேலே