.......காந்தியம்........

இருபது வயதில்...............
----------------------------------------
தன்மேல் அடிவிழுந்த பிறகுதானே,
இந்த மனிதன் துடித்து எழுந்தான் !
பிறர் நலம் பேணுபவன் தானாகவே,
மனமுவந்து போராடியிருக்க வேண்டாமோ?

நாற்பது வயதில்............
-------------------------------------
தன்மேல் விழுந்த அடி,
தாய்நாட்டு மனிதன் எவனுக்கும்,
விழவே கூடாது வலி என்னோடு போகட்டும்,
என்று தன்னலம் மறந்து தகித்து வந்தவன் !

அறுபது வயதில்...........
------------------------------------
தன்நாட்டு மக்களின் நிலை உணர்ந்து,
விழிகசிந்து ஆடை துறந்து,
அன்னியப்பொருள் அனைத்தையும் வீசி,
ராட்டை சுழற்றி சுயகௌரவம் பேணி,
தமது தேவைக்கு தானே என உணர்த்தியவன் !

என்பது வயதில்..........
----------------------------------
எதையும் துறப்பது எளிதானதல்லவே !
போராட தலைமை ஏற்று,
போதித்து அஹிம்சையினை !
மிதிபட்டு வதைபட்டு உடலெல்லாம் ரணப்பட்டு,
எல்லாமே துறந்து நமை சுவாசிக்க வைத்தவன் !!

ஆயுளின் முடிவில்............
-----------------------------------------
தேசப்பிதா ! மகாத்மா !
எங்கள் குலதெய்வம் !!
அமைதியும் பொறுமையும்,
கற்பித்த கடவுள் எங்கள் தாத்தா !
"காந்தி அடிகள்"

எழுதியவர் : தேசம் (2-Oct-13, 1:28 pm)
பார்வை : 79

மேலே