பத்தாம் பதிப்பின் முடிவுரை

பத்தாம் படியினைத் தொட்டு விட்டேன்

பத்து தொகுப்பினை முடித்து விட்டேன் !

ஐந்து நூறு கவிதைகளை எட்டி விட்டேன்

ஆயிரம் என்இலக்கு இந்த ஆண்டிற்குள் !


ஆக்கமும் பாக்களும் எனக்கு சொந்தம்

ஊக்கமும் உணர்வும் உங்களின் பந்தம் !

வாழ்த்தும் கருத்தும் வலிவைத் தந்தது

வார்த்தைகள் என் நெஞ்சில் பிறந்தது !


இணையத்தில் இணைந்திட்ட நண்பர்கள்

இதயத்தால் வாழ்த்திடும் பலஅன்பர்கள்

என்னை எழுதிட தூண்டிடும் உள்ளங்கள்

அனைவருக்கும் நன்றி அன்பான அகமுடன் !

பழனி குமார்

( குறிப்பு : 500 என்பது இங்கே பதிவாகாத சில கவிதைகளையும் சேர்த்து . அவை திருமண வாழ்த்துக்கள் , இரங்கல் கவிதைகள் , மற்றும் அஞ்சலி கவிதைகள் - அவை 48 ம் சேர்த்து )

எழுதியவர் : பழனிகுமார் (6-Oct-13, 7:27 am)
பார்வை : 101

மேலே