காதல் மழை....!

அன்பே
நீ
புதுக்குடை
வாங்கிய பின்
உன்னில்
எத்தனை மாற்றங்கள் ...!

கதிரவன்
விடைபெறும்
மாலையில்
பூங்காவில்
நாம்
இனி பூத்திருப்போம் என்றாய் ....!

பூவாக
நீ
வருவாயென
பூங்கா வாயிலில்
நான்
காத்திருக்க....
நெஞ்சில்
புத்தகங்களை
இறுக
அணைத்து
புள்ளி மானாய்
துள்ளிக்குதித்து
ஓடோடி வந்தாய் ....!

பூங்காவில்
பூக்களிருக்க
புத்தகங்கள்
எதற்கு என்றேன் ...?

இவைகள்
புத்தகங்கள் அல்ல
உன்
இதயம் என்றாய் ...!

அழுத்தமாக
அணைத்துக்கொள்ளதே
மூச்சு
எங்கெங்கோ
முட்டி
மோதுகிறது என்றேன் ...!

நாணப்புள்ளிகள்
வைத்து
வெட்க கோடுகள்
இழுத்து
உன் கால்பெருவிரலால்
காதல் கோலமிட்டாய் ...!

பூக்களுக்கும்
நாணம் வந்தது
உன் கோலம் பார்த்து ....!

பூக்கள்
அழகாயிருக்கு
என்றாய் ...
பூக்களை விட
நீ
அழகென்றேன் ....!

எனக்காக
ஒரு ரோஜா
வேண்டும் என்றாய் ..
உலகத்தை கேட்டாலும்
உனக்காக
வாங்கி தருவேன் என்றேன் ...!

பூக்களை
திருடி தா
எனக்காக திருடுவது
அழகென்றாய் ....!

திருட்டு விழிகளால்
மேய்ந்து
அழகான ரோஜாவை
கிள்ளி
உன்னிடம் நீட்டினேன் ..!

சட்டென
முகம்
சிவந்தாய்
கூந்தலில்
சூட்டி விடக்கூடாதாவென்று ..?

ஆசையாய்
சூட்டி மகிழ்ந்தேன் ....

ஆயிரம் பூக்களை
சுமக்கும்
பூங்காவும்
அழகற்று விழ்ந்தது
உன் கூந்தல் அழகு முன்பு .. ...!

என்
விரல்களும்
பூரிப்டைந்தன
பிறவிப்பயன் அடைந்ததாக ....!

தேனுக்கு தெரியுமா
தென்றலின் வாசனை ...?

மழை வந்தால்
நல்லாயிருக்குமென
மேகம் பார்த்து
கண் சிமிட்டினாய் ....!

அன்பே
நீ
அழைத்து
வராமல் இருப்பவர்
உண்டோ தரணியில் ...?

மழையும் வந்தது
குதித்து நனைந்து
விளையாடினோம்
காதல் விளையாட்டு ..!

சுழலும் விழிகளால்
அனைத்தையும் ரசித்தாய் ...

குடை மறைவில்
வந்த
உன் அப்பனை எப்படி
பார்க்காமல் விட்டாய்...?

குடையால்
நீ
அடிவாங்க ...
அடிவாங்க ...

விழிப்பு வந்தது
குதித்து எழுந்தேன்
கட்டிலை விட்டு
கனவும் கலைந்தது...!

நேற்று
வாங்கிய
புதுக்குடையுடன்
என்னை பார்த்து
நீ
முறைத்து சென்ற
உன்
விழிகளுடன்
நான் தூங்க சென்றதன் விளைவோ .... ...?

இன்றும்
நான்
சீக்கிரம்
உறங்க வேண்டும்
நீ
குடையால்
அடிவாங்கிய
இடங்களுக்கு
ஒத்தடம் கொடுக்க ...!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

எழுதியவர் : வெற்றி நாயகன் (6-Oct-13, 8:05 am)
பார்வை : 378

மேலே