என் அன்பை புரிந்து கொள்வாயா
உனக்காக காத்திருந்து
களைத்து போன நேரங்களில்
இதய அழுகின்ற ஒசை
உன் இதயத்தில் கேட்கவில்லையா...,
என்னை பற்றி சிந்திப்பதை
மறந்து உன்னை பற்றி
பல நாட்களாய்
சிந்தித்து கொண்டிருக்கின்றேன்
அதை உன் இதயம் அறியவில்லையா...
உனக்கு வலிக்க முன்பு
என் இதயம் வலிக்குமே
நீ துடிக்கும் முன்பே
நான் துடிப்பேன் என்று
உனக்கு புரியவில்லையா...,
வரமாய் நீ கிடைக்க
தவமாய் தவம் இருக்கின்றேன்
உன் இதயம்
என் அன்பை புரிந்து கொள்வாயா........???